தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலிருந்து ரூபா குருநாத் ராஜினாமா. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து ரூபா குருநாத் ராஜினாமா செய்தார். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பை ஏற்ற ரூபா குருநாத் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக உள்ள ரூபா குருநாத், வணிகம் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் 70 வயத்திற்கு மேல் பதவியில் இருக்க கூடாது. தொடர்ந்து இரண்டு முறை பதவியில் இருந்தால் பின்னர் ஒரு வருடம் இடைவெளிக்குப் பின்னர் பதவிக்கு வர வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு பதவியில் இருக்க கூடாது போன்ற பல விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரை செய்தது. அதன்படி மாநிலம் கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 23ம் தேதி இந்திய […]