தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. உணவு மற்றூம் நுகர்ர்வோர் வழங்கள் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா காரணமாக ரேசன் கடை ஊழியர்கள் தங்களின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை10,அகஸ்ட்7 மற்றும் செப்.,4 ஆகிய தேதிகளில் பணிகளை மேற்கொண்டனர்.இம்மூன்று நாட்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 3 நாட்களுக்கு இணையாக செப்.,19,அக்.,17 மற்றும் நவ.,21 ஆகிய நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என கூறப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.