ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, மருத்துவர் வீராசாமி சேசய்யாவுக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார். மேலும், சமூகச்செயற்பாட்டாளர் தாமோதரன், தவில் இசைக்கலைஞர் முருகையன் உள்ளிட்டோரும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர். அதனை தொடர்ந்து, மறைந்த உ.பி.முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பிரபா ஆத்ரே […]
குடியரசு தலைவரை சந்தித்து, சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவுருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்கிறார். இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க, சபாநாயகர் அப்பாவு மேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து, […]
இன்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம். தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவுருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்கிறார். இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு அவர்கள் இன்று குடியரசுத் தலைவரை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை குடியரசுத் தலைவர் […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு, மேகதாது அணை பிரச்சனை குறித்தும் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக குடியரசு தலைவரை சந்திக்கிறார். இந்த சந்திப்பானது மரியாதையின் நிமித்தமான சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.
ஆளுநர் நியமனத்திற்கு தகுதி வாய்ந்த ஒரு பெண் கூட கிடைக்கவில்லையா? என ஆளுநர் நியமனம் குறித்து குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடக மாநில புதிய ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் ஜாகன்பாய் படேல், மிசோரம் ஹரிபாபு, ஹிமாச்சல் ராஜேந்திரன் விஸ்வநாதன், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்ய […]
தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள். இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதுண்டு. புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவதுண்டு. ஒவ்வொருவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி, வீடுகளில் விஷேசமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், சில தலைவர்கள் […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், மார்ச் 30-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, இன்று இவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து, இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், ஆனால் அவர் மேலும் சில பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், […]
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவாமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தின் உடல்நலம் குறித்து, பிரதமர் மோடி விசாரித்துள்ளர். இன்று காலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் உடல் நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக வங்க தேசம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இது குறித்து அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]
திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 9:45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், அங்கு சுவாமி தரிசனம் முடிந்தவுடன், திருப்பதியில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டரில், மீண்டும் மாலை 5:35 மணிக்கு சென்னை வருகிறார். இதனையடுத்து அவரை வரவேற்று வழியனுப்பி வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாலை […]
ஏழை இஸ்லாமிய மாணவர் ஒருவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை பரிசாக வழங்கியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி என்னும் இடத்தை சேர்ந்த ஒரு ஏழை இஸ்லாமிய மாணவர் ரியாஸ் என்பவருக்கு பக்ரீத் பரிசாக பந்தய சைக்கிளை வழங்கியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஜனாதிபதி மாளிகையில் வைத்து குடியரசுத் தலைவர் கொடுத்த சைக்கிளை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். ரியாசின் வாழ்க்கை வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவும், […]
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து முக்கியமாக பணியாற்றுபவர்களில் ஒரு பகுதியினர் சிவில் சர்வீஸ். இன்று இவர்களது தினமாக உலகமுழுவதும் கருதப்பட்டு வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிவில் சர்வீஸ் நிலையில் பணியாற்றுபவர்கள் தான் கொரோனா வைரசுக்கு எதிராக அரசுடன் இணைந்து போராடக்கூடியவர்கள். இந்த சிவில் சர்வீஸ் தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உறுதியாக போராடக்கூடிய சிவில் சர்வீஸ் துறையினரை பாராட்டுவதாகவும், அவர்களே […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். இந்த சந்திப்பின் போது, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், […]