இன்று சிவில் சர்விஸ் தினம் – வாழ்த்து கூறிய பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து முக்கியமாக பணியாற்றுபவர்களில் ஒரு பகுதியினர் சிவில் சர்வீஸ். இன்று இவர்களது தினமாக உலகமுழுவதும் கருதப்பட்டு வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவில் சர்வீஸ் நிலையில் பணியாற்றுபவர்கள் தான் கொரோனா வைரசுக்கு எதிராக அரசுடன் இணைந்து போராடக்கூடியவர்கள். இந்த சிவில் சர்வீஸ் தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உறுதியாக போராடக்கூடிய சிவில் சர்வீஸ் துறையினரை பாராட்டுவதாகவும், அவர்களே நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் சிவில் சர்வீஸ் ஊழியர்கள்தான் வலிமையாகவும் உறுதியாகவும் நிர்வாகத்தை கையாள்வதாக கூறி அவர்களுக்கு சிவில் சிவில் சர்வீஸ் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.