தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு சக்தி, தமிழகத்தில் திமுக தான் தான் என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை. கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து, இந்த வன்முறை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையை பயன்படுத்துங்கள், இல்லையெனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
போதைப் பொருள் கலாச்சாரம் போன்று, வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது என ஈபிஎஸ் அறிக்கை. கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இதுகுறித்து, காவல்துறையினர் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இது சமந்தமாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றச செயல்களில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் எனவும் தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை […]
தொடர் குண்டு வீச்சு சம்பம் தொடர்பாக காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல். தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது. பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில், அமமுக […]
கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை ஆய்வு செய்த பின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி. கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலத்தை பார்வையிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள், குண்டு வைக்க நினைப்பவர்கள் தான் இம்மாதிரியான செயலில் ஈடுபட முடியும் என குற்றசாட்டினார். அது […]
குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா என நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பயங்கரவாதிகளிக்கு நிதி திரட்டிய புகாரின் பேரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த […]
திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தில் சந்திரபோஸ் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. திருவாரூர் மாவட்டம் செம்படவன்காடு கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் இருசக்கர வாகனம் தீப்பிடித்துள்ளது. இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் தீயில் எரிந்து சேதமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.