செவிலியர்கள் யாரும் உடலை வறுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தல். தகுதியுடைய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்திரம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 8 செவிலியர்கள் சங்கம் உள்ளது. இதனால் யார் போராட்டம் நடத்துகின்றனர் என்று தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை பார்க்க வரவில்லை. செவிலியர்கள் யாரும் உடலை வறுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். இதனிடையே, பணி நிரந்திர உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து […]
தமிழக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு செவிலியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக அரசு மருத்துவமனையில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.