மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்யுடன் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய நபராக 18 ஆண்டுகள் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதிவு விலகினர். இதனால் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருகிறார். […]