ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவியா.?
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்யுடன் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கிய நபராக 18 ஆண்டுகள் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதிவு விலகினர். இதனால் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து சிந்தியா, நேற்று மாலையிலேயே பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் அந்த முடிவை சிந்தியா ஒத்திவைத்தார். அதனால் இன்று பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும், அவருக்கு எத்தகைய பொறுப்பு வழங்குவது என்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிந்தியாவுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக்கி மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி விரும்புவதாக தெரிய வந்துள்ளது. எனவே இன்று அல்லது நாளை சிந்தியா பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.