மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி ஷாரிக் ஜங்கிள் சர்வைவல் எனும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து அதில் பயணித்தவரும், ஆட்டோ ஓட்டுனரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முக்கிய குற்றவாளியான ஷாரிக் பற்றி பல்வேறு தகவல்கள் அவ்வப்போது விசாரணையின் போது வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. ஏற்க்கனவே ஷாரிக் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளது விசாரணையில் […]
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ ன்ஐஏ விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்து கர்நாடக அரசு கடிதம் எழுதியதையடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மங்களூருவில் கடந்த 19-ஆம் தேதி சாலையில் சென்ற ஆட்டோவில் […]
மங்களூருவில் ஆண் குழந்தையை பிடிக்காத தாய் ஒருவர் பிறந்து 11 நாட்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதையடுத்து, 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு பவித்ரா, கடந்த ஆண்டு துமகூரு மாவட்டம் ஷிரா தாலுகாவை சேர்ந்த […]
கம்பளா பந்தயத்தில் 125 மீட்டர் பந்தய தூரத்தை, வெறும் 10.44 விநாடிகளில் கடந்து நிஷாந்த் ஷெட்டி புதிய சாதனை. கர்நாடகா மாநிலத்தில் வருடந்தோறும் நடைபெறும் கம்பளா போட்டிகள் மிகவும் பிரபலமானது. இரு எருமைகளை பூட்டிக்கொண்டு, அதன் கயிற்றை விடாமல் எருமை மாடுகளுடன் ஓடி பந்தய தூரத்தைக் கடக்க வேண்டும் எனபது இப்போட்டியின் விதியாகும். அந்தவகையில் இந்தாண்டு மங்களூரில் நடைபெற்ற கம்பாலா போட்டியில் பஜகோலி ஜோகிபெட்டுவில் வசிக்கும் கம்பாலா ஓட்டப்பந்தய வீரர் நிஷாந்த் ஷெட்டி புதிய சாதனை படைத்துள்ளார். […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா: கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் விகாஷ் குமார் மற்றும் மங்களூரு நகரத்தின் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த தடை உத்தரவுகள் இன்று மாலை 6 மணி முதல் 2021 ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை […]