மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு – என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு!
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ ன்ஐஏ விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை.
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த கர்நாடக அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்து கர்நாடக அரசு கடிதம் எழுதியதையடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மங்களூருவில் கடந்த 19-ஆம் தேதி சாலையில் சென்ற ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. வழக்கை கர்நாடக போலீஸ் விசாரித்து வந்த நிலையில், தற்போது என்ஐஏ-வுக்கு மாற்றியது மத்திய உள்துறை அமைச்சகம். 2 நாட்களுக்குள் முன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்ஐஏ-வுக்கு அனுப்பியது கர்நாடக காவல்துறை. குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதன்மை குற்றவாளி ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார். குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.