கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு முன்னர் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது சொத்து ஆவணங்கள், சம்பளத்திற்கான ரசீதுகள் ஆகியவற்றை கடன் பெற்று தருவதாக குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு கடைவீதியில் வசித்து வரும் ராஜா என்பவர் வாங்கி சென்றதாகவும், அந்த ஆவணங்களை தவறாக பயன்படுத்தி தனது பெயரில் தனக்கு தெரியாமல் கார் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், […]
கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், […]