“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

குளித்தலையில் மோசடி வழக்கில் கைதான ராஜா என்பவருக்கும் தவெக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

TVK Leader Vijay - Raja - TVK Person Anand

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு முன்னர் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது சொத்து ஆவணங்கள், சம்பளத்திற்கான ரசீதுகள் ஆகியவற்றை கடன் பெற்று தருவதாக குளித்தலை அருகே உள்ள கோட்டைமேடு கடைவீதியில் வசித்து வரும் ராஜா என்பவர் வாங்கி சென்றதாகவும்,

அந்த ஆவணங்களை தவறாக பயன்படுத்தி தனது பெயரில் தனக்கு தெரியாமல் கார் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.19,600 எடுக்கப்பட்ட பிறகு தான் இந்த விஷயம் தனக்கு தெரியும். பின்னர். ராஜாவிடம் இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு அவர் தகாத முறையில் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்து இருந்தார்.

இந்த புகாரின் பெயரில் நேற்று ராஜாவை குளித்தலை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜா நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்று குறிப்பிட்டு அவர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருக்கும் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகின. சில செய்தி நிறுவனங்களும் தவெக நிர்வாகி கைது என்றே செய்திகள் வெளியிட்டன.

இந்நிலையில், இன்று கரூர் மாவட்ட தவெக தலைவர் வி.பி.மதியழகன் என்பவர் கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  “கரூர் மாவட்டம், குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வந்து கொண்டுள்ளன. கைது செய்யப்பட்ட ராஜாவிற்க்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்க்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்திலோ அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவர் இதுவரை எந்த பொறுப்பிலும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்