சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடை அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது காரணமாக அப்பகுதியை பரபரப்பு. சென்னை பாரிமுனை என்.எஸ்.பி போஸ் சாலையில் உள்ள நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தில் ஹால்மார்க் ஜூவல்லர்ஸ் என்னும் நகைக்கடையை நடத்தி வருபவர் கோட்டி ஸ்ரீகாந்த். இவர், 2018 ஆம் ஆண்டு பல வடிவங்களில் மோதிரம் செய்யும் பணியினை தொடங்கினார். கடைசியாக கேமிலியா பூவின் டிசைனை தேர்ந்தெடுத்து மோதிரம் உருவாக்கும் பணியை தொடங்கியதாகவும், அதன் முதல்கட்ட வடிவம் கடந்தாண்டு மார்ச் மாதம் உருவாகியதாகவும், தற்போது அதனை 7,801 வைரக்கற்களை கொண்டு பூவை போன்ற டிசைனில் ஒற்றை மோதிரம் ஒன்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.