நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி இஸ்ரோ களம் இறங்கியது. மேலும், இந்திய விண்வெளி […]