பிரதமர் நரேந்திர மோடி,டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் சனிக்கிழமையன்று சென்றுள்ளார். சீக்கியர்களின் 9வது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்த நாளையொட்டி சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி குருத்வாராவின் சிஸ் கஞ்ச் சாஹிப் பகுதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.ஆனால்,எந்தவித சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பிரதமர் மோடி குருத்வாராவுக்கு சென்றுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியதாவது,”குரு தேக் பகதூரின் 400 வது பிறந்த […]
பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு திடீரென சென்றது, அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு திடீரென சென்று, அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். குருத்வாராவுக்கு பிரதமர் மோடி ஆரஞ்சுத் துணியால் தலையை மறைத்து பிரகாசமான மஞ்சள் குர்தாவுடன் இடுப்பு கோட் அணிந்து சீக்கிய முறைப்படி வருகை தந்தார். மேலும், எந்த ஒரு அறிவிப்புமின்றி […]
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் , யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் சீக்கிய மத வழிப்பாட்டு தலம் மற்றும் சந்தை அருகே நடந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் […]