Breaking:அசாமில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு.!
- அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது.
- இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் , யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் சீக்கிய மத வழிப்பாட்டு தலம் மற்றும் சந்தை அருகே நடந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் ,யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் சென்றனர். அசாம் டி.ஜி.பி. ஜோதி மகந்த் இந்த சம்பவம் குறித்து கூறுகையில் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை யார் என விசாரித்து வருகின்றனர் என கூறினார்.
இன்று நாடுமுழுவதும் 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அசாமில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.