பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதன்படி, 2 மணி நேரம் 7 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மருத்துவம், உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கான புதிய திட்டங்கள், சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. […]
அனைத்து விதமான பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் மசோதாவை சட்டபேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து விதமான காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் சட்டத்திருத்த மசோதாவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தபின் பேசிய அவர், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமான சேர்க்கையானது நடைபெறும். […]
தமிழ்நாடு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி என்றும்,அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அரசாணை. தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு நிதி […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.5 கோடி ரூபாய் பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனந்தி என்பவர் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர். இவர் வயது 35. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு துறையான அச்சுத்துறை, எழுதுபொருள் துறை மற்றும் மின்வாரியத்தில் உதவி பொறியாளர், சத்துணவு அமைப்பாளர் போன்ற […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.35 லட்சம் பணம் மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சரின் உறவினரை கைது செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சரோஜாவின் அக்காள் மகன் ரமேஷ்பாபு. இவர் சென்னை அசோக் நகரை சேர்ந்தவர். இவரது வயது 45. விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தை சேர்ந்த குணசேகரனுக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மூலமாக ரமேஷ்பாபு அறிமுகமாகியுள்ளார். அப்போது ரமேஷ் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என்று பலரும் வேலை பார்த்து வருகின்றனர். இதில், இளம் மருத்துவர்களின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பணியில் ஈடுபட்டு இறக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவதை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதை குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. கொரோனா பணியில் ஈடுபட்டு கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், […]