கன மழைக்கு மத்தியில் உ.பி.யின் எட்டாவாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பலி, 2 பேர் காயம். உத்தரபிரதேசத்தின் எட்டாவாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார், என முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபர், ரயில் அவரைக் கடந்து சென்ற பிறகும் அதிசயமாக உயிர் பிழைக்கும் காட்சி. ரயில்வே பிளாட்பாரம் ஒன்றில் ஒரு நபர் மீது ரயில் கடந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் பிளாட்பாரத்தின் அருகே பலர் கூடியிருப்பதையம், ரயில் கடந்து சென்ற பிறகு ஒரு நபர் அதிசயமாக தனது உடலில் ஒரு கீறல் […]