சென்னையில் உள்ள சாலைகளில் பைக் சாகசம் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில்,சென்னையில் காவல் துறையிடமிருந்து தப்பிக்க நம்பர் பிளேட்டை மறைத்து பைக் ஓட்டி வந்த 100 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும்,அவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்ற அண்ணா சாலை மற்றும் ஆலந்தூர் பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் ஏமாற்றுதல்,மற்றும் மோட்டார் வாகன […]
சென்னை:மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.குறிப்பாக,சென்னையில் வீடுகள்,சாலைகள் எனப் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்மோட்டார் மூலமாக மழை நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கையை நோக்கி மக்கள் திரும்புகின்றனர்.இதற்கிடையில்,மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னையில் […]
சென்னை:வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில், வெள்ளப் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேலும்,வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால்,தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல,சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில்,வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு […]
சென்னையில், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வண்ணம் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் விதிமீறல் இல்லாத திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறி செயல்படுவதன் மூலம் பலவிதமான ஆபத்துகள் ஏற்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு பல உயிர்கள் வாகன விபத்துகளினால் பறிபோகிறது. இந்நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வண்ணமாக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதாவது ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்வது, சீட் பெல்ட் போடாமல் பயணம் செய்வது, செல்போன் […]