‘Zero violation junction’ – வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை!

Default Image

சென்னையில், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வண்ணம் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் விதிமீறல் இல்லாத திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறி செயல்படுவதன் மூலம் பலவிதமான ஆபத்துகள் ஏற்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு பல உயிர்கள் வாகன விபத்துகளினால் பறிபோகிறது. இந்நிலையில், சென்னையில் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வண்ணமாக காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதாவது ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்வது, சீட் பெல்ட் போடாமல் பயணம் செய்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சிக்னல் ஜம்பிங், வெள்ளை கோட்டை தண்டி வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை தடுக்கும் வண்ணமாக சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் விதிமீறல் இல்லாத திட்டம்(Zero violation junction) கொண்டுவரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த திட்டமானது அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல், அண்ணா நினைவு வளைவு சிக்னல், திருவான்மியூர் சிக்னல் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல் ஆகிய நான்கு சிக்னல்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள ஆய்வாளர்கள் இத்திட்டம் குறித்து மக்களுக்கு அறிவுறுத்த  உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால், போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக குறைப்பது. போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள சந்திப்புகளில் நிபந்தனையின்றி உடனடியாக 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் இந்த திட்டம் பற்றி போலீசார் அறிவுரைகளை வழங்குவார்கள். ஒரே நபர் தொடர்ந்து விதிமுறைகள் மீறும்போது அவர்களது வாகன உரிமம் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்