மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.இயக்குநர் சிகரம் என்று தமிழ் சினிமாவில் வெகுமாக எல்லோராலும் அறியப்பட்டவர் கே.பாலசந்தர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலகுறைவால் காலமானர்.இந்நிலையில் இவருடைய மனைவி ராஜம் பாலசந்தர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும் மற்றும் பிரசன்னா என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்ததது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. […]