இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி காலமானார்…!!!
மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.இயக்குநர் சிகரம் என்று தமிழ் சினிமாவில் வெகுமாக எல்லோராலும் அறியப்பட்டவர் கே.பாலசந்தர்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலகுறைவால் காலமானர்.இந்நிலையில் இவருடைய மனைவி ராஜம் பாலசந்தர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும் மற்றும் பிரசன்னா என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.