இளம் மல்யுத்த வீரர்களுக்காக இந்த போராட்டம்- பஜ்ரங் புனியா

வருங்கால வீரர்களுக்காக மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டம் நடைபெறுவதாக பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

வருங்கால வீரர்களுக்காக மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டம் நடைபெறுவதாக பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக இந்திய மல்யுத்த வீரர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். WFI தலைவர் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அடுத்து வீரர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தின் மூன்றாவது நாளில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, நாங்கள் எங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த போராட்டம், மல்யுத்தத்தின் எதிர்காலமாக இருக்கும் எங்கள் இளம் மல்யுத்த வீரர்களுக்காக என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்ட சரண் சிங், எங்கள் முன்வருவதற்கு நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என அவர் மேலும் கூறினார்.