ஓரமா நில்லுங்க.. கேமராவுக்கு போஸ் கொடுக்கணும்... சுனில் சேத்ரியைத் ஓரம்கட்டிய இல கணேசன்...!

டுராண்ட் கோப்பை, இறுதிப் போட்டியில் வென்ற பெங்களூரு எஃப்.சி அணிக்கு விருது வழங்கும் விழாவில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசன், சுனில் சேத்ரியை தள்ளி விட்ட வீடியோ

டுராண்ட் கோப்பை, இறுதிப் போட்டியில் வென்ற பெங்களூரு எஃப்.சி அணிக்கு விருது வழங்கும் விழாவில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசன், சுனில் சேத்ரியை தள்ளி விட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவிலுள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு எஃப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை எஃப்.சி அணியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு எஃப்.சி அணி முதன்முறையாக டுராண்ட் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

போட்டிக்கு பின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மேற்குவங்கம் மற்றும் மணிப்பூரின் கவர்னர் இந்த கோப்பையை பெங்களூரு எஃப்.சி அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு வழங்கினார். மேடையில் இல கணேசன் கேமரா வுக்கு போஸ் கொடுக்கும் போது சுனில் சேத்ரி குறுக்கே வந்ததால் அவரைத் தள்ளி விட்டது வீடியோவில் பதிவானது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பலரும் இது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

unknown node