ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் சபலெங்கா, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ரூ.17 கோடி பரிசுத் தொகையைப் பெற்றார்.
unknown nodeஆஸ்திரேலிய ஓபன் 2023, டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் ஐந்தாவது தரவரிசை வீராங்கனையான அரினா சபலெங்கா, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக ஆஸ்-ஓப்பனை வென்றுள்ளார். இந்த வெற்றியைத்தொடர்ந்து சபலெங்கா பரிசுத்தொகையாக AU$2,975,000 (ரூ.17 கோடிக்கு மேல்) வென்றுள்ளார்.
24 வயதான பெலாரஷ்ய டென்னிஸ் வீரரான அரினா சபலெங்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை தோற்கடித்தார். அரினா சபலெங்காவின் வெற்றிக்கு, 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான ராட் லேவர் தனது ட்விட்டரில், வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது முதல் கிராண்ட்ஸ்லாம் வென்ற உங்களுக்கு என் வாழ்த்துகள், நீங்கள் கடுமையாக போராடினீர்கள், இருவருக்குமான ஆட்டம் சிறப்பாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
unknown node