644 கோல்கள் அடித்த மெசி ! ஒவ்வொரு கோல்கீப்பருக்கும் ஒரு பீர் அன்பளிப்பு

Budweiser sent a beer to every goalkeeper who has conceded a Lionel Messi goal after the netted his historic 644 goals for Barcelona

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான  மெசி பார்சிலோனா அணிக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 644 -வது கோல் அண்மையில் அடித்த நிலையில் , அவர் கோல் அடிக்க வழிவிட்ட  ஒவ்வொரு கோல்கீப்பருக்கும் பட்வைசர் ஒரு பீர் அன்பளிப்பாக  அனுப்பியுள்ளது.

கடந்த 2004 -ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் மெசி.லா லிகா தொடரில்  வலென்சியா (Valencia ) அணிக்கு எதிரான போட்டியில் கால்பந்து ஜாம்பவானாக கருதப்படும்,பீலேவின் சாதனைகளையும் சமன் செய்தார்.அதாவது 1957-74 ஆம் ஆண்டுகளில் கால்பந்து ஜாம்பவான் பீலே 643 கோல்கள் அடித்திருந்தார்.ஆகவே 643 கோல்கள் அடித்து அந்த சாதனையை மெசி சமன் செய்தார்.

இதனைத்தொடர்ந்து   வல்லாடோலிட்  (Valladolid) அணியுடன் நடைபெற்ற லீக் போட்டியில் பார்சிலோனா அணி  3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.இந்த போட்டியில்  மெசி ஒரு கோல் அடித்த நிலையில் , 644 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.மேலும் கிளப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த பீலேவின் நீண்டகால சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பட்வைசர் என்ற பீர் தயாரிக்கும் நிறுவனம் மெசியின் சாதனையை பாராட்டும் வகையில்  ,மெஸ்சி 644 கோல்கள் அடிக்கும்போது எதிரணியின் கோல்கீப்பராக இருந்த கோல்கீப்பர்களுக்கு பீல் பார்ட்டில்கள் அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.