117 ரன்களுக்குள் சுருண்டது மேற்கு இந்திய தீவுகள் அணி

Default Image

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2 டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்குள் சுருண்டு விட்டது.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி   நடைபெற்று வருகிறது.  இந்த போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தீர்மானித்தது.இதனைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில்  140.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக விகாரி 111 ,கோலி 76, இஷாந்த் சர்மா 57 ரன்கள் அடித்தனர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சி சமாளிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தது.

இறுதியில் 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே அடித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மேயர் 34 ரன்கள் அடித்தார் .இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இந்திய அணியைவிட மேற்கு இந்திய தீவுகள் அணி 299 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்