#ViralPicture:டும் டும் டும்!காதலியை கரம்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்!

சிஎஸ்கே மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.

சிஎஸ்கே மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.

இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர்,தனது நீண்ட நாள் காதலியான ஜெய பரத்வாஜை ஆக்ராவில் நேற்று (ஜூன் 1) பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து,தீபக் புதன்கிழமை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,தனது திருமண விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து கூறியதாவது:”நான் உன்னை முதன்முதலில் சந்தித்தபோது நீதான் என்று உணர்ந்தேன்.நான் சொன்னது சரிதான். மேலும் உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.என் வாழ்வின் சிறந்த தருணங்களில் ஒன்று.எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் ஒன்றாக அனுபவித்திருக்கிறோம்.அனைவரும் தயவு செய்து உங்கள் ஆசிகளை எங்களுக்கு வழங்குங்கள்”,என்று கூறியுள்ளார்.

unknown node

அதன்படி,தீபக் சாஹர் மற்றும் ஜெய பரத்வாஜூக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே,ஜெய பரத்வாஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில்:”அவர் என் இதயத்தைத் திருடிவிட்டார், அதனால் நான் அவரது கடைசி பெயரைத் திருடினேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node