"வணக்கம் டா மாப்ள.. ஆஸ்திரேலியால இருந்து" வைரலாகும் வார்னரின் புகைப்படம்!

Warner Just posted a photo in Instagram and captioned it as "Vanakam da mapla Australia la irunthu." Fans started to trend that photo.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வணக்கம் டா மாப்ள” என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருக்கின்றார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் இவர் தெலங்கு பாடலான “புட்டமொம்மா” பாடலுக்கு நடனமாடியது அனைவராலும் பேசப்பட்டது.

அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விடியோக்களை பதிவிட்டு கொண்டே வந்துள்ளார். தற்பொழுது ஆஸ்திரேலியா அணி, இந்தியாவுடன் ஒருநாள், டி-20 டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகள் ஆடிவருகிறது. தற்பொழுது ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக டேவிட் வார்னர் ஒருநாள், டி-20 தொடரில் இருந்து விலகினார்.

இந்நிலையில் வார்னர் டிக்டாக் புகழான “வணக்கம்டா மாப்ள.. தேனீல இருந்து” அருண் போல இருக்கும் புகைப்படத்தை வார்னர் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அருண் என அந்த நபருக்கு பதில் வார்னரின் உருவம் இருக்கும். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலர் லைக், கமண்டும் செய்து வந்தனர். அப்பொழுது ஒருவர் அந்த புகைப்படத்தில் “என்றும் இந்தியன்” என பதிவிட்டார். அதற்கு வார்னர், “இந்தியா எனது இரண்டாம் வீடு” என பதிலளித்தார்.