டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை

Instagram: உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023ல் 20 சதவீதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் சந்தை நுண்ணறிவு நிறுவனம் சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது. Read More – இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் IQOO Z9 5G… கசிந்த முக்கிய அம்சங்கள்! இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற … Read more

டிக் டாக் தடை… நேபாளம் அதிரடி நடவடிக்கை.!

நேபாளத்தின் புஷ்ப கமல் தஹால் அரசாங்கம் சீனாவிற்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் நேபாள அரசு டிக்டாக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்தார். நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டாக் தீங்கு விளைவிப்பதால் தடை செய்யப்படுவதாக நேபாள அரசு கூறியுள்ளது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு பெரும் அடியாகும். ஏனெனில் நேபாளத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நேபாளத்தில் … Read more

டிக்டாக்கில் வரும் ஐந்து செய்திகளில் ஒன்று தவறானவை – NewsGuard

டிக்டாக் விடீயோக்களின் நம்பகத்தன்மையை பற்றிய அறிக்கையை நியூஸ்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்யா-உக்ரைன் போர், கோவிட்-19 மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கிய செய்தித் தலைப்புகளுக்கான TikTok தேடல் முடிவுகள் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. அந்த தளத்தால் தானாகவே பரிந்துரைக்கப்பட்ட ஐந்து செய்தி வீடியோக்களில் கிட்டத்தட்ட ஒன்று தவறான தகவலைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. இது பற்றி விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம் “தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும் அத்தகைய … Read more

Tiktok: இளம் வயதினரை விழுங்கும் டிக்டாக் ,யூடியூப் ஷார்ட்ஸ் பெற்றோர்கள் கவனம் தேவை !

தற்போது இருக்கும் காலத்தில் ஆறாம் விரலாக எப்போதும் நம் கையில் இருக்கும் மொபைல் போன்கள் பல வகையில் நமக்கு உதவியாக இருந்தாலும் பல பிரச்சனைகளை விளைவிக்கின்றது. குழந்தைகளும் இளம்வயதினரும் டிக்டாக், யூடூயூப் போன்ற செயலிகளில் அதிக நேரம் செலவிடுவதால் உடலளவிலும் மனதளவிலும் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும்,அதற்கு மாற்று என்று சொல்லும் பல செயலிகளும் நம் குழந்தைகளை அடிமைப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. சீனாவின் வீடியோ செயலி டிக்டாக் ஜூன் 2016 இல் தொடங்கப்பட்டது , இந்த … Read more

நாங்கள் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டோம்… அமெரிக்காவிடம் பணிந்த டிக்டாக்…

அமெரிக்கர்களின் தரவுகளை டிக் டாக் நிறுவனம் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு டிக் டாக் மறுப்பு தெரிவித்துள்ள்ளது.  சீனாவை பூர்விகமாக கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலி என்றால் அது டிக் டாக் செயலி தான். ஆனால், இந்த செயலி பயனர்களின் தரவுகளை லீக் செய்கிறது என்ற குற்றச்சாட்டால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அந்நாட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் அமெரிக்க அரசு சார்பாக ஓர் குற்றசாட்டு டிக் டாக் … Read more

‘நான் சாக போறேன்’- மதுரை காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம்…!

மதுரை காவல் ஆணையருக்கு தான் சாக போவதாக பேசி வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூரியாதேவி. திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் வசிக்கும் சூர்யா தேவி என்பவர், சமூகவலைத்தளங்களில், அரசியல், சினிமா நடிகைகள் மற்றும் டிக்டாக் பிரபலங்களை;’/. விமர்சித்து வீடியோ வெளியிட்டு, அதன் மூலம் விளம்பரம் தேடி வந்தார். இந்நிலையில், சூர்யா தேவியின் ஆண் நண்பரான சிக்கந்தருடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து, சூர்யா தேவி மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு … Read more

டிக் டாக் செயலிக்கு மாற்றாக அறிமுகமாகும் புதிய செயலி…! பேஸ்புக் நிறுவனம் அதிரடி…!

பேஸ்புக் நிறுவனம், டிக் டாக் போலவே செயல்படும் BARS என்ற சாட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான மோதல் போக்கின் காரணமாக, சீன தயாரிப்பான டிக்டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் இந்த செயலியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இந்திய அரசின் இந்த செயல் டிக்டாக் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின் பல செயலிகள் அறிமுகம் ஆனாலும், டிக் டாக் செயலிக்கு ஈடான ஒரு திருப்தியை இந்த … Read more

இதுதான் என் கடைசி பதிவு என போஸ்ட் செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட டிக் டாக் பிரபலம்!

அமெரிக்காவை சேர்ந்த டிக்டாக் பிரபலமாகிய தாஜாரியா என்ற 18 வயது பெண்மணி இதுதான் எனது கடைசி போஸ்ட் என இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன்பின் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். டீ என அழைக்கப்படும் பிரபலமான அமெரிக்காவின் டிக் டாக் நட்சத்திரம் தான் தாஜாரியா குயின்ஸ் நோயர். இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பதிவிடும் இவர் டிக் டாக் செயலி மூலமாக … Read more

டிக் டாக் நிரந்தர தடை…! ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் …!

டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்தியாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது.  இந்தியாவின் இறையான்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துவதாக கூறி, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69-ஏ இன் கீழ் பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.  இதுகுறித்து, இந்திய அரசு கூறுகையில், மக்களின் தகவல்களை சீன நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியது நிலையில், … Read more

“வணக்கம் டா மாப்ள.. ஆஸ்திரேலியால இருந்து” வைரலாகும் வார்னரின் புகைப்படம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வணக்கம் டா மாப்ள” என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருக்கின்றார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் இவர் தெலங்கு பாடலான “புட்டமொம்மா” பாடலுக்கு நடனமாடியது அனைவராலும் பேசப்பட்டது. அதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து விடியோக்களை பதிவிட்டு கொண்டே வந்துள்ளார். தற்பொழுது ஆஸ்திரேலியா அணி, இந்தியாவுடன் ஒருநாள், டி-20 டெஸ்ட் … Read more