'இருங்க விராட் பாய்'...கோலியை இழுத்து பிடித்து ஃபோட்டோ எடுத்த பெண்மணி! வைரலாகும் வீடியோ!

நேற்று கிரிக்கெட் வீரர் விராட் கோலியை, அவரது ரசிகை ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

Virat Kohli Viral Video

மும்பை :கடந்த நவம்பர்-5ம் தேதி தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவரது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், அடுத்ததாக அவர் நவ.22-ம் தேதி நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

அதற்கு இன்னும் 15 நாட்களுக்கு மேல் இருப்பதால், இதற்கிடையில் அவர் தனக்குக் கிடைத்த ஓய்வை குடும்பத்துடன் களித்துக் கொண்டு வருகிறார். இதன் விளைவாக நேற்று விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அவரது நண்பரின் அழைப்பை ஏற்று ஒரு ப்ரோமோஷன் விழாவிற்காகச் சென்றுள்ளார்.

அந்த சமயம் அங்கிருந்த ரசிகர்கள் முன் வந்து அவரது மனைவியுடன் ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டார். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த விராட் கோலியின் பெண் ரசிகை ஒருவர் கோலியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயற்சி செய்வார்.

ஆனால், கோலிக்கு அப்போது சமயம் இல்லை எனக் கூறி செல்வார். ஆனால் அந்த பெண்மணி ‘இருங்க விராட்’ எனக் கூறி அவரது கையைப் பிடித்து இழுத்து ஃபோட்டோ எடுத்துக் கொள்வார்.

unknown node

ஆனாலும், விராட் கோலி எதுவும் சொல்லாமல் மௌனமாக அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்வார். இது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் ரசிகர்களால் பரவி வருகிறது.

unknown node