கொழும்பு :பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர். 20 அணிகள் பங்கேற்ற லீக் சுற்று முடிவுக்கு வந்த நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை நடைபெறும் இந்த சுற்றில், முன்னேறிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோத உள்ளன. இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஒரு குழுவிலும், நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் மற்றொரு குழுவிலும் இடம் பெற்றுள்ளன.
சூப்பர் 8 சுற்றின் முழு அட்டவணை பின்வருமாறு:
பிப்ரவரி 21: நியூசிலாந்து vs பாகிஸ்தான் – கொழும்பு
பிப்ரவரி 22: இலங்கை vs இங்கிலாந்து – கண்டி
இந்தியா vs தென்னாப்பிரிக்கா – அகமதாபாத்
பிப்ரவரி 23: ஜிம்பாப்வே vs வெஸ்ட் இண்டீஸ் – மும்பை
பிப்ரவரி 24: இங்கிலாந்து vs பாகிஸ்தான் – கண்டி
பிப்ரவரி 25: இலங்கை vs நியூசிலாந்து – கொழும்பு
பிப்ரவரி 26: வெஸ்ட் இண்டீஸ் vs தென்னாப்பிரிக்கா – அகமதாபாத்
இந்தியா vs ஜிம்பாப்வே – சென்னை
பிப்ரவரி 27: இங்கிலாந்து vs நியூசிலாந்து – கொழும்பு
பிப்ரவரி 28: இலங்கை vs பாகிஸ்தான் – கண்டி
மார்ச் 1: ஜிம்பாப்வே vs தென்னாப்பிரிக்கா – டெல்லி
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் – கொல்கத்தா
இந்த சுற்றில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் தங்களின் ஆதிக்கத்தை நிரூபிக்க தயாராக உள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது, அதேபோல இலங்கை இங்கிலாந்தை சந்திக்கிறது.அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி அட்டவணையும் வெளியாகியுள்ளது.
மார்ச் 4: அரையிறுதி 1 (கொழும்பு / கொல்கத்தா)
மார்ச் 5: அரையிறுதி 2 (மும்பை)
மார்ச் 8: இறுதிப்போட்டி (அகமதாபாத் / கொழும்பு)
ஒட்டுமொத்தமாக, சூப்பர் 8 சுற்று தொடங்குவதால் டி20 உலகக் கோப்பை தொடர் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்தியா தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இந்த சுற்று முடிவுகள் அரையிறுதி அணிகளை தீர்மானிக்கும் என்பதால், அனைத்து ரசிகர்களின் கவனமும் இந்த போட்டிகளில் தான் இருக்கிறது. தொடர் மார்ச் 8-ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் முடிவடைய உள்ளது.
