தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க்கமால் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்த சிராஜ்!

Siraj's father died due to a health illness. BCCI organize to attend the funeral of his father, but Siraj wants to play in australia series

உடல்நலக்குறைவால் தனது தந்தை உயிரிழந்த காரணமாக, இறுதி சடங்கில் பங்கேற்க பிசிசிஐ ஏற்பாடு செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் தாம் விளையாடவுள்ளதாக இந்திய வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி, தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பிடித்த வீரர், முகமது சிராஜ். இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி, 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். தற்பொழுது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி, கடந்த 13 ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தது. வீரர்கள் தற்பொழுது கொரோனா தடுப்பு விதிகளின்படி தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் முகமத் சிராஜின் தந்தை முகமது கோஸ், உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். தற்பொழுது தனிமைப்படுத்தல் முகாமில் இருப்பதால், தந்தையின் இறுதிச்சடங்கில் முகமது சிராஜ் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அவரை பிசிசிஐ இந்தியா அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் முகமது சிராஜ், மறுப்பு தெரிவித்து, தான் ஆஸ்திரேலியாவிலேயே இருந்து இத்தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். தந்தை உயிரிழந்தும், அணிக்காக விளையாடும் முகமது சிராஜின் முடிவு, பலரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.