ஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கும் ஷர்துல் தாகூர்...!

The BCCI has announced that Shardul Tagore will replace Jadeja in the upcoming 20-over series

ஜடேஜாவிற்கு பதிலாக வருகின்ற 20 ஓவர் போட்டிகளில் ஷர்துல் தாகூர் விளையாடுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் நேற்று இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இறுதி ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்து ரவிந்திர ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பட்டதால் ஜடேஜா காயம் அடைந்தார். இதனால் இந்திய அணி பீல்டிங் செய்யும்போது ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மாற்று வீரராக சாஹல் களம் இறங்கினார்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு மத்தியில் ஜடேஜா அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா..? இல்லையா..? என்ற ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழும்பியது. தற்போது, ஜடேஜா சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று பரிந்துரை உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜடேஜாவிற்கு பதிலாகபதிலாக அடுத்து வரும் 20 ஓவர் போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.