#RRvRCB: எவின் லூயிஸ் அதிரடியான அரைசதம்.. 150 ரன்கள் எடுத்தால் பெங்களூரு வெற்றி!

In the match against Bangalore, Rajasthan team scored 149 runs for the loss of 9 wickets.

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த லூயிஸ் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 ரன்கள் எடுத்த நிலையில், ஷாபாஸ் அகமது பந்தில் வெளியேறினார். இதன்பின் வந்த வீரர்கள் பெங்களூரு பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது. பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் படேல் 3, சாஹல், ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.