#RCB v MI: விராட், மேக்ஸ்வெல் அரைசதம்.. மும்பை வெற்றி பெற 166 ரன்கள் இலக்கு!

Royal Challengers Bangalore scored 165 in the 39th league match of the IPL series by Virat Kohli.

ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் விராட் கோலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 165 ரன்கள் குவிப்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் எதிர்பார்த்ததும், எதிர்பார்காததும் நிகழ்ந்து வருகிறது. இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற 38வது போட்டியில் சென்னை vs கொல்கத்தா இடையேயான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து, இன்றைய தினத்தின் மற்றோரு அனல் பறக்கும் 39வது லீக் போட்டியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கியனர். ஆனால், இதுவரை சிறப்பாக தொடக்கம் தந்து வந்த படிக்கல் இப்போட்டியில் டக் அவுட்டானார்.

ஒரு பக்கம் நிதானமாக விளையாடி வந்த கோலி 42 பந்துகளில் 51 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து ஸ்ரீகர் பாரத் 32 ரன்களில் ஆட்டமிழக்க, க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் ஜோடி மிக பிரமாண்டமான அதிரடி ஷாட்டுகளை அடித்து, ரன்களை குவித்தனர்.

அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 56 ரன்கள் அடித்து வெளியேற, இவரை தொடர்ந்து பும்ரா பந்தில் ஏபி டி விக்கெட்டை இழந்தார். பும்ரா அடுத்தடுத்த பந்துகளில் மிகப்பெரிய இரண்டு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை குவித்தது. இதனால் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது. மும்பை அணி பந்துவீச்சை பொறுத்தளவில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.