பரிதாப நிலையில் பஞ்சாப் அணி! பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கா?

பஞ்சாப் கிங்ஸை 23 ரன்களில் வீழ்த்திய ஆர்சிபி, ஐபிஎல் 2026 தொடரில் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

Hero Image

பஞ்சாப் : பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 பிளேஆஃப்ஸ் போட்டியில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி வரலாற்றில் ஒரு மோசமான சாதனையையும் படைத்துள்ளது.

அது என்னவென்றால், ஒரு டி20 தொடரில் ஒரே சீசனில் 9 முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த முதல் அணி என்ற மோசமான நிலைக்கு பஞ்சாப் கிங்ஸ் தள்ளப்பட்டுள்ளது. இதுவரை எந்த அணியும் இந்த அளவுக்கு மோசமான பந்து வீச்சை ஒரு சீசனில் வெளிப்படுத்தவில்லை.

பஞ்சாப் கிங்ஸ் சீசனின் முதல் பாதியில் பட்டையைக் கிளப்பிய நிலையில், இரண்டாம் பாதியில் முற்றிலும் மோசமாக விளையாடி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.

  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 222 ரன்கள் அடித்தும் தோல்வி
  • சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 202 ரன்கள் அடித்தும் தோல்வி
  • டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 210 ரன்கள் அடித்தும் தோல்வி
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் அடித்தும் தோல்வி

இந்த நிலையில், பரிதாபமான நிலையில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி மே 23ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் வென்றால்தான் பிளேஆஃப்ஸ் நம்பிக்கையைத் தக்கவைக்க முடியும். தோற்றால் உடனடியாக வெளியேறும் நிலை ஏற்படும்.

தற்போது 13 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 4-வது இடத்தில் உள்ளது. மீதம் ஒரு போட்டி மட்டுமே பஞ்சாப் அணிக்கு இருக்கும் நிலையில், அதில் வெற்றிபெற்றால் அதிகபட்சம் 15 புள்ளிகள் வரை மட்டுமே செல்ல முடியும். இதனால் டாப்-2 இடங்களுக்கு வாய்ப்பில்லை.

பிளேஆஃப்ஸ் சென்றாலும் எலிமினேட்டர், குவாலிஃபையர்-2, இறுதிப் போட்டி என மூன்று தொடர் வெற்றிகள் தேவைப்படும். அதே சமயம், சென்னை அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், அந்த போட்டிகளில் சென்னை வெற்றிபெற்றால் பஞ்சாப்பை பின்னுக்கு தள்ளி பிளே ஆப் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே, பஞ்சாப் அணி பிளே ஆப் செல்வது கிட்டத்தட்ட ஒரு கடினமான சூழலில் உள்ளது. சென்னை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து பஞ்சாப் அந்த ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கிறது எனவே, என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.