aus vs nz: வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி ரெடி!

New Zealand Cricket Board has released the list of players who will take part in the T20 series against Australia. The team is led by Kane Williamson.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி-20 தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அணியை கேன் வில்லியம்சன் தலைமை தாங்குகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 போட்டியினை விளையாடவுள்ளது. இந்த டி-20 தொடர், பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள், இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு தொடங்கும். இந்தநிலையில், இந்த தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த அணியை கேன் வில்லியம்சன் தலைமை தாங்கவுள்ளார்.

வீரர்களின் பட்டியல்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹமிஷ் பென்னட், ட்ரெண்ட் போல்ட், மார்க் சப்மேன், டெவன் கான்வே, மார்ட்டின் குப்டில், கைல் ஜேமீசன், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் செய்பர்ட், இஷ் சோதி, டிம் சவுதி.