DC vs MI: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு..!
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மும்பை அணி வீரர்கள்:
குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர் ), ரோஹித் சர்மா (கேப்டன் ), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா , கீரோன் பொல்லார்ட், க்ருனல் பாண்டியா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி அணி வீரர்கள்:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மியர், லலித் யாதவ், அஸ்வின், ரபாடா, அமித் மிஸ்ரா, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணியும், டெல்லி அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவியுள்ளது.