#MIvPBKS: தோல்வியில் இருந்து மீளுமா மும்பை?... டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு!

Mumbai won the toss and elected to bowl first in the 42nd league match in Abu Dhabi.

அபுதாபியில் நடைபெறும் 42வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் 2வது போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் 42வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை அணிக்கு இப்போட்டி மிக முக்கியமான போட்டியாகும். தொடர்ந்து மூன்று தோல்விகளை கண்டு, 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபக்கம் பஞ்சாப் அணி ஒரு வெற்றியுடன் களமிறங்கி உள்ளது. இதனால், அதே 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

எனவே, இன்றைய போட்டியில் மும்பை அணி தொடர் தோல்வியிலிருந்து மீளுமா? அல்லது பஞ்சாப் அணி மற்றொரு வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:(Playing XI):

ரோஹித் சர்மா (c), குயின்டன் டி காக் (w), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், நாதன் குல்டர் நைல், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் அணி:(Playing XI):

கேஎல் ராகுல் (w/c), மன்தீப் சிங், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்பிரீத் பிரார், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளன.