#MIvDC: டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு..!
ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணி:
பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர் / கேப்டன்) ஹெட்மியர், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டியில் டெல்லி வெற்றி பெறும் பட்சத்தில் 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதே போல மும்பை அணி இந்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் நான்காவது இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் இப்போட்டியை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.