நியூசிலாந்து “ஏ” அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய “ஏ” அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இத்தொடர் அனைத்திலும் ரோஹித் சர்மா கேபட்னாகவும், கேஎல் ராகுல் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அணியில் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின் உள்ளிட்டவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இருப்பினும், டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட தொடரில் ஐபிஎல்-லில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். பிசிசிஐயின் செலக்சன் கம்யூனிட்டியை விமர்சித்தனர். இந்த நிலையில், நியூசிலாந்து “ஏ” அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய “ஏ” அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றது மட்டுமில்லாமல் அவர்தான் கேப்டனாக தேர்வாகியுள்ளார்.
சென்னையில் நடைபெறவுள்ள நியூசிலாந்து “ஏ” அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட மாஸ்டர்கார்டு ஒரு நாள் தொடருக்கான இந்திய “ஏ” அணியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து “ஏ” அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான முதல் போட்டி தொடங்குகிறது. இதன்பின் 2வது போட்டி 25-ஆம் தேதியும், கடைசி போட்டி 27-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்தியா ஏ அணி:பிருத்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், சஞ்சு சாம்சன் (கேப்டன்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் அங்கத் பாவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
NEWS – India “A” squad for one-day series against New Zealand “A” announced.
Sanju Samson to lead the team for the same.
More details here ????????https://t.co/x2q04UrFlY
— BCCI (@BCCI) September 16, 2022