#KKRvPBKS: வெங்கடேஷ் ஐயர் அதிரடி... 165 ரன்கள் குவித்த கொல்கத்தா!

Punjab Kings scored 165 for 7 against Kolkata Knight Riders in the IPL.

ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிரான போட்டியில் 7 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 165 ரன்கள் குவிப்பு.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரரான சுப்மான் கில் 7 ரன்கள் அடித்து வெளியேறினார். இதன்பின் வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 67 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து, ராகுல் திரிபாதி 34 ரங்களில் அவுட்டான நிலையில், நிதிஷ் ராணா 18 பந்துகளில் 31 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னரே தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் ஆகியோர் ஒரு சில ரன்களை சேர்ந்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

பஞ்சாப் அணி பந்துவீச்சை பொறுத்தளவில் அர்ஷ்தீப் சிங் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில் 166 ரன்கள் அடித்தால் பஞ்சாப் அணி வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

#KKRvPBKS: வெங்கடேஷ் ஐயர் அதிரடி... 165 ரன்கள் குவித்த கொல்கத்தா!