சோனு சூட் பவுண்டேஷனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிக்கும் கரண் ஷர்மா..!

சோனு சூட் பவுண்டேஷனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளர் கரண் ஷர்மா தொடர்ந்து உதவி செய்து வந்ததால் அவருக்கு சோனு சூட் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரான சோனு சூட் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார். அதுமட்டுமின்றி, தற்போது ஆக்ஜின் சிலிண்டர், மருத்துவமனைக்கு தேவையான உதவிகள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு (சோனு சூட் பவுன்டேஷன்) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்புக்கு மக்கள் பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலர் தங்களால் முடிந்த பண உதவி செய்து வருகின்றார்கள்.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளர் கரண் ஷர்மா சோனு சூட் பவுன்டேஷனுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் சோனு சூட் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” சகோதரர் கரண் ஷர்மாவுக்கு மிக்க நன்றி சோனு சூட் பவுன்டேஷனுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள். நீங்கள் மீண்டும் தேசத்தின் இளைஞர்களை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025