#IPL2021: இன்று ஹைதராபாத் – பஞ்சாப் மோதல்..!! முதல் வெற்றியை பதிவு செய்யுமா SRH..??

Sunrisers Hyderabad will take on Punjab Kings in the 14th match of the IPL series today.

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின்  14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது . இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதியதில் 11 முறை ஹைதராபாத் அணியும், 5 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிவிவரப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. அதைபோல் ஹைதராபாத் அணி 3 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிவிவரப்பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் ஹைதராபாத் அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.