#IPL 2021: பெங்களூருக்கு எதிரான போட்டியில் 164 ரன்கள் எடுத்த டெல்லி!

In the final league match of the IPL series against Bangalore, the Delhi team scored 160 runs for the loss of 5 wickets.

ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.

இன்றைய ஐபிஎல் தொடரின் 56-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடித்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா 48 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் அடித்து வெளியேறினர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒரு சில ரன்களை மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் ஹெட்மியர் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் பந்துவீச்சை பொறுத்தளவில் முகமது சிராஜ் 2, யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் 165 ரன்கள் அடித்தால் பெங்களூர் அணி வெற்றி பெறும்.