217 ரன்னில் ஆல் அவுட் ஆன இந்தியா…, 5 விக்கெட்டை பறித்த கைல் ஜேமீசன்..!

Default Image

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில்  92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.

நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் விராட் கோலி 124 பந்துகளுக்கு 44 , ரஹானே 79 பந்துகளுக்கு 29 ரன்களுடன் இருந்தனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், காலையில் சவுத்தாம்ப்டனில் மழை பெய்தது.

இதனால், மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது. இதைத்தொடர்ந்து, போட்டி 3 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 3.30 மணிக்கு தொடங்கியது. இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கேப்டன் கோலி விக்கெட்டை இழந்தார்.  பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

மத்தியில் இறங்கிய ஜடேஜா 15, அஸ்வின் 22 ரன்கள் எடுத்தனர். ரிஷாப் பண்ட் , இஷாந்த் சர்மா, ஷமி தலா 4 ரன்கள் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இப்போட்டியில் நியூஸிலாந்து அணியில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டை பறித்தார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15 கோடிக்கு ஜேமீசனை ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணி தற்போது தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்