இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி மவுண்ட் மவுங்கனுயில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வெல்லிங்டனில் நேற்று நடைபெறவிருந்த முதல் டி-20 போட்டி மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது டி-20 போட்டி இன்று மவுண்ட் மவுங்கனுயில் நடைபெறுகிறது. டி-20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்று வெளியேறிய இந்திய அணி, இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுடன் இந்தியா களம் இறங்குகிறது.
இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு ஹர்டிக் பாண்டியா தலைமை வகிக்கிறார். இந்த போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை தெரிவித்துள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே அனைத்து டி-20 களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய நேரப்படி போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி:ஹர்திக் பாண்டியா (C), ரிஷப் பந்த் (VC & WK), இஷான் கிஷன், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார். , உம்ரான் மாலிக்
நியூசிலாந்து அணி:கேன் வில்லியம்சன் (C), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே (WK), லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, பிளேர் டிக்னர்.