பழிவாங்கியது இந்தியா அணி ...முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை பந்தாடிய இந்திய அணி.....

இந்தியா - இலங்கை அணிகளிடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின்,  லீக் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது.ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள்

இந்தியா – இலங்கை அணிகளிடையே நேற்று நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின்,  லீக் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது.ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. மெண்டிஸ் 38 பந்தில் 55 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். 153 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

unknown node

ரோகித் சர்மா 11, தவான் 8 ரன், சுரேஷ் ரெய்னா 27 ரன் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கே.எல் ராகுல் 18 ரன் எடுத்தனர். அதன்பின் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஜோடி சிறப்பாக விளையாடியதால் இந்தியா 17.3 ஓவரில் 153 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே 42 ரன், தினேஷ் கார்த்திக் 39 ரன் எடுத்தனர். முதல் லீக் ஆட்டத்தில் வென்ற இலங்கைக்கு இந்த வெற்றி மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.