எனக்கு எதுவுமே தெரியாது...உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாதது குறித்து வேதனைப்பட்ட ஜிதேஷ் சர்மா!

2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாததை அடுத்து ஜிதேஷ் சர்மா மனம் உடைந்தார்,

jitesh sharma

டெல்லி :இந்திய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, 2026 T20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது குறித்து மிகுந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். “அது ஹார்ட் ப்ரோக்கனாக இருந்தது, ஏனெனில் ICC T20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு நான் மிகவும் கடினமாக உழைத்தேன். ஆனால் அது விதி, அதை மறுக்க முடியாது. அந்த தருணத்தில் நான் நம்ப முடியாமல் உணர்ந்தேன்” என்று ஜிதேஷ் கிரிக் ட்ராக்கரிடம் தெரிவித்துள்ளார்

.ஜிதேஷ் சர்மா அணியில் தொடர்ந்து டி20 போட்டிகளில் ஆடி வந்த நிலையில், உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட பிறகே அவருக்கு தனது பெயர் இல்லை என்று தெரியவந்தது. “அணி அறிவிக்கப்படும் வரை எனக்கு எதுவும் தெரியாது. அறிவிக்கப்பட்ட பிறகு தான் தெரிந்தது” என்று அவர் கூறினார். தேர்வாளர்கள் தரப்பில் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கமளித்தபடி, ஆசிய கோப்பை 2025க்கு முந்தைய காம்பினேஷனுக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டது. சஞ்சு சாம்சன் முதல் தேர்வு தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக இருப்பதால், பேக் அப் விக்கெட் கீப்பராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்பட்டது. இதனால் ஈஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். ஈஷான் ஜார்கண்ட் அணியை சையது முஸ்தாக் அலி டிராபியில் வெற்றி பெற வழிநடத்தியதும் கூடுதல் காரணமாகும்.

ஜிதேஷ் சர்மாவுக்கு டி20களில் பினிஷராக 5 இன்னிங்ஸ்களில் 62 ரன்கள், 158.97 ஸ்ட்ரைக் ரேட் இருந்தபோதிலும், அவரது பேட்டிங் சில பிரச்சினைகளை கொண்டிருந்தது. ஆனால், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் கருதுகிறார். “அஜித் அகர்கரின் விளக்கம் நியாயமானது. பின்னர் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களுடன் பேசியபோது அவர்களின் காரணம் சரியானது என்று புரிந்துகொண்டேன்” என்று ஜிதேஷ் கூறினார்.

இந்த ஏமாற்றத்தை ஜிதேஷ் சர்மா குடும்பத்துடன் நேரம் செலவிட்டு மற்றும் RCB பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் உடன் பேசி கடந்துள்ளார். T20 உலகக்கோப்பை பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்குகிறது. ஜிதேஷ் இப்போது தனது விளையாட்டை மேம்படுத்தி அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அவரது நேர்மையான பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.